இந்தியாவில் சுதந்திரம் இல்லையா? முஸ்லிம்கள் மீது தாக்குதலா? இல்லவே இல்லை: வாஷிங்டன் ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு

இந்தியாவில் சுதந்திரம் இல்லையா? முஸ்லிம்கள் மீது தாக்குதலா? இல்லவே இல்லை: வாஷிங்டன் ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு

மோடி

வாஷிங்டனில் உள்ள ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கையில் இந்தியாவில் சுதந்திரம் என்பதை முழு சுதந்திரம் என்பதிலிருந்து ‘பகுதியளவு சுதந்திரம்’ என்பதாக குறைத்துள்ளது.

  • Share this:
    வாஷிங்டனில் உள்ள ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கையில் இந்தியாவில் சுதந்திரம் என்பதை முழு சுதந்திரம் என்பதிலிருந்து ‘பகுதியளவு சுதந்திரம்’ என்பதாக குறைத்துள்ளது.

    அதிக சுதந்திரம் உள்ள நாட்டுக்கு மதிப்பெண் 100 அளிக்கப்படும், இதில் 71-ல் இருந்த இந்தியா 67க்கு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டு செய்தியாளர்கள் கைது செய்யப்படுவதையும் இந்த அறிக்கை கண்டித்துள்ளது.

    ‘உரிமைகளும், குடிமைச் சமூக சுதந்திரமும் இந்தியாவில் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தது முதல் புரையோடிப்போயுள்ளது’ என்று இந்த அறிக்கை சாடியுள்ளது.

    முஸ்லிம்கள் மீதான தாக்குதல், தேசத்துரோக வழக்குகள், அரசின் கொரொனா வைரஸ் நோய்க்கு செயல்பட்ட விதம் லாக் டவுன் ஆகிய காரணங்களை குறிப்பிட்டு இந்தியாவில் பகுதியளவுதான் சுதந்திரம் உள்ளது என்று ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கைக் கூறியுள்ளது.

    இது நரேந்திர மோடி தலைமை மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவே கடுமையாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், “தவறான வழிகாட்டுதல் மற்றும் தவறான தகவல் என்று மறுத்துள்ளது.

    “இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கூட்டாட்சி அமைபின் கீழ் மத்தியில் ஆளும் கட்சியில்லாமல் பிற கட்சிகள்தான் ஆள்கின்றன. இதற்கான தேர்தல் நடைமுறை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்கிறது. தனித்துவம் படைத்த தேர்தல் அமைப்பினால் தேர்தல் நியாயமாக நடந்து வருகிறது. ஒரு அதிர்வுடைய ஜனநாயகம் இங்கு இருப்பதையே இவை காட்டுகிறது. பலதரப்பட்ட கருத்துகள் உடையவர்களுக்கான இடம் இங்கு உண்டு” என்று கூறியுள்ளது.

    முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, “இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில் புனிதமாகக் கருதப்படும் அனைவரும் சமமாகவே நடத்தப்பட வேண்டும் என்பதைக் கடைப்படிக்கிறோம்.

    2019-ல் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வடக்கு டெல்லியில் முஸ்லிம்கள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வன்முறை நிகந்ததில் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி மத்திய அரசு தெரிவிக்கையில் போலீஸார் பாரபட்சமின்றி துரிதமாகவே செயல்பட்டனர். அனைத்துப் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தேசத்துரோக வழக்குகள் குறித்து மத்திய அரசு கூறுகையில், பொது அமைதி, ஒழுங்கு மற்றும் போலீஸ் ஆகியவை மாநில அரசின் விவகாரமாகும். உயிரையும் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டியது மாநில அரசுகளின் கையில் உள்ளது. எனவே பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் கூறுகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    மேலும், மோடி ஆட்சியின் கீழ் பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுத்துள்ளது. “மறுப்பு, எதிர்ப்பு, விவாதம் ஆகியவை இந்திய பண்பாட்டின் அங்கம். இந்தியா அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு அறிவிக்கையே அளித்திருக்கிறோம்” என்றது.

    அதே போல் ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கையில் இந்தியாவில் இணையதள சுதந்திரமும் சீரழிந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கும் சட்டம் ஒழுங்கை காட்டியுள்ள மத்திய அரசு. அதே போல் லாக் டவுன் நடவடிக்கை கோவிட் 10 பரவலைத் தடுக்கவே என்றும் பதிலறிக்கை அளித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: