முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 47 லட்சம் பேர் பலி- பீதியைக் கிளப்பிய WHO- மறுத்த மத்திய அரசு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 47 லட்சம் பேர் பலி- பீதியைக் கிளப்பிய WHO- மறுத்த மத்திய அரசு

உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பு

வியாழன் அன்று உலகச் சுகாதார அமைப்பு (WHO) உலகம் முழுதும் கோவிட் -19-ஆல் நேரடியாகவோ அல்லது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சமூகத்தின் மீதான கோவிட்டின் பெருமளவு தாக்கத்தினாலோ 14.9 மில்லியன் மக்கள் பலியனாதாக மதிப்பிட்டதோடு இந்தியாவில் 4.7 மில்லியன் இறப்புகள் அதாவது கொரோனா வைரஸின்  நேரடி அல்லது மறைமுகத் தாக்குதலினால் இந்தியாவில் 47 லட்சம் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

வியாழன் அன்று உலகச் சுகாதார அமைப்பு (WHO) உலகம் முழுதும் கோவிட் -19-ஆல் நேரடியாகவோ அல்லது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சமூகத்தின் மீதான கோவிட்டின் பெருமளவு தாக்கத்தினாலோ 14.9 மில்லியன் மக்கள் பலியனாதாக மதிப்பிட்டதோடு இந்தியாவில் 4.7 மில்லியன் இறப்புகள் அதாவது கொரோனா வைரஸின்  நேரடி அல்லது மறைமுகத் தாக்குதலினால் இந்தியாவில் 47 லட்சம் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

இதனையடுத்து உலகச் சுகாதார அமைப்பு இறப்புகளைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்திய மாதிரிகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது. அதாவது உலகச் சுகாதார அமைப்பு பயன்படுத்திய கணித மாதிரிகள் கோளாறானது என்றும் கேள்விக்குரியது என்றும் மத்திய அரசு உலகச் சுகாதார அமைப்பின் இந்த இறப்புக் கணக்கை மறுத்துள்ளது மத்திய அரசு.

WHO இன் புதிய மதிப்பீடுகளின்படி, ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில் "கூடுதல் இறப்பு" என்று சுகாதார அமைப்பு விவரிக்கும் கோவிட்-19 முழு இறப்பு எண்ணிக்கை தோராயமாக 14.9 மில்லியன் என்கிறது, அதாவது கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய மரணங்கள் இவை என்கிறது உலகச் சுகாதார அமைப்பு.

கூடுதல் இறப்பு விகிதம் என்பது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேரடியாக மரணித்தவர்கள் அல்லது மறைமுகமாக கொரோனா பேரலைத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பினால் ஏற்பட்ட மரணங்கள், மற்றும் கோவிட் சமூகத்தில் ஏற்படுத்திய தீவிர தாக்கத்தின் விளைவான மரணங்கள் என்று விவரிக்கும் உலகச் சுகாதார அமைப்பு இந்தியாவில் பலி எண்ணிக்கை 47 லட்சத்து 40 ஆயிரத்து 894 என்று மதிப்பிட்டுள்ளது.

இது தவிர உலக சுகாதார அமைப்பு எழுதிய குறிப்பின் படி, “இந்த மதிப்பீடுகள் தேசிய புள்ளிவிவர மதிப்பீடுகளுடன் ஒப்பிடக்கூடியதல்ல, காரணம் தரவு மற்றும் தரவுகளை ஆய்வு செய்யும் முறைகளில் வித்தியாசம் உள்ளது” என்று கூறியுள்ளது.

இதனை மத்திய அரசு மறுத்துக் கூறும்போது, “பல்வேறு ஆய்வு மாதிரிகளின் அடிப்படையில் WHO இந்தியாவிற்கான பல்வேறு அதிகப்படியான இறப்பு புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது, இதில் பயன்படுத்தப்பட்ட கணித மாதிரிகளின் நம்பகத் தன்மை மற்றும் அதன் தீவிரம் மீது கேள்விகள் எழுகிறது” என்று மறுத்துள்ளது.

மேலும், மத்திய அரசு கூறும்போது, “இது போன்ற மாதிரிகளைக் கொண்ட அணுகுமுறை கோவிட் பாசிட்டிவிட்டியின் மாறுபடும் தன்மைகளை கணக்கில் கொள்வதில்லை. ஒருநாட்டின் காலம் மற்றும் இடம் ஆகிய அளவுகோல்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதே போல் டெஸ்ட் செய்யும் விகிதம் பலதரப்பட்ட நோய்க்கணிப்பு முறைகளின் அதாவது RAT/RT-PCR என பரிசோதனை வகைமைகளை பல்வேறு இடங்களுக்குத் தக்கவாறு பயன்படுத்தியதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எனவே உலகச் சுகாதார அமைப்பு கூறும் இந்தப் புள்ளி விவரம் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்று மறுத்துள்ளது.

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் உலகச் சுகாதார அமைப்பின் இந்த கணித மாதிரி மற்றும் பலி எண்ணிக்கை ஆகியவற்றை மறுத்துள்ளார்.

First published:

Tags: Corona death, Covid-19, WHO