எலக்ட்ரானிக் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டம்

news18india
Updated: May 16, 2018, 7:29 PM IST
எலக்ட்ரானிக் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டம்
எலெக்ட்ரிக் கார்.
news18india
Updated: May 16, 2018, 7:29 PM IST
எலக்ட்ரானிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக  மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் சார்ஜ் போடும் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரானிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.  முதல்கட்டமாக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியில் 3 கிலோ மீட்டர் இடைவெளியிலும், தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டர் இடைவேளையிலும் சார்ஜ் போடும் மையங்கள் உருவாக்கப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஏறும்வகையில் 15 ஆயிரம் மையங்களை,  மெதுவாக சார்ஜ் ஏறும் வகையில் 30 ஆயிரம் மையங்களையும் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களை அமைக்கும் பணியில் மத்திய அரசின் என்.டி.பி.சி. மற்றும் ‘பவர் கிரிடு’ உள்ளிட்ட நிறுவனங்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த சார்ஜ் மையங்கள் 3-5 வருடங்களில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக இடம் தேர்வு செய்வது, மின்சாரம் வழங்கும் மையங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோல் ரயில் உள்ள இடங்களில் சார்ஜ் போடும் மையங்களை அமைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மகேந்திரா அண்டு மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஓலா, உபர் உங்களின் நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்