ஜனவரி 31 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜனவரி 31 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து

நாடு முழுவதும், 5 வயதிற்குட்டபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

 • Share this:
  ஜனவரி 31ம் தேதி அன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

  வரும் 17ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கருத்தில் கொண்டு, காலவரையின்றி ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், ஜனவரி 31ம் தேதி நாடு முழுவதும், 5 வயதிற்குட்டபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

  முன்னதாக, 30ம் தேதி தேசிய நோய்த்தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவார் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  Published by:Yuvaraj V
  First published: