கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்!

கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Yuvaraj V | news18
Updated: September 18, 2019, 5:43 PM IST
கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்!
மாதிரிப் படம்
Yuvaraj V | news18
Updated: September 18, 2019, 5:43 PM IST
கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊதியத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறை தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது. கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு நடப்பாண்டு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை 10 சதவீதம் அதிகரிக்கவும், பயனாளர்களின் ஊதியத்தை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


ஊதிய உயர்வு மூலம் கிராமப்புற மக்கள், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் நுகர்வு அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see:

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...