நாட்டின் புகையிலை பிடிப்பதை குறைக்கும் நோக்கில் புகை பிடிப்பதற்கான வயதை 18-லிருந்து 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் 200 ரூபாய் அபராத தொகையை 2000 ரூபாயாக உயர்த்தவும் முடிவெடுத்துள்ளது.
சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கிற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்துள்ளது. புகையிலைப் பொருட்கள் விளம்பரம், வர்த்தகம் முறைப்படுத்துதல், உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
புகையிலை திருத்த மசோதாவின் மூலம் ஏற்கனவே உள்ள சடத்தின் உட்பிரிவில் 6 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. புகைப்பிடிப்பவர்களின் வயதை 21 அதிகரிக்கப்படுகிறது. 21 வயதிற்கு குறைவானர்வகளுக்கு புகையிலை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்படும்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதத்தை 200 லிருந்து 2000 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வயது குறைந்த நபர்களுக்கு சட்டத்தை மீறி சிகரெட் விற்பனை செய்யப்பவர்களுக்கு, தண்டனையை 2 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டாக அதிகரிக்கவும், அபராதத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
சிகரெட்டை சில்லறை விலையில் விற்கவும் தடை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் விற்பதால் சிகெரட் பாக்கெட் மேல் இருக்கும் எச்சரிக்கை வாசகம் அவர்களின் கவனத்திற்கு சென்று சேர்வதில்லை.
விமான நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்தற்கான பிரேத்யேக அறைகள் இருப்பதை நீக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்களுக்கான வரைவு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.