வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது- சந்திரபாபு நாயுடு

news18
Updated: March 13, 2018, 1:55 PM IST
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது- சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
news18
Updated: March 13, 2018, 1:55 PM IST
மத்திய அரசு தென் மாநிலங்களிலிருந்து  வரி வசூலித்து வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது என  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

அமராவதி மாநில சட்ட மன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில்  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை கடுமையாக சாடினார்.

2018 ம் ஆண்டின் பட்ஜெட் தாக்குதலின் போது ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அப்போதிலிருந்தே  தெலுங்கு தேசம் கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவு சுமூக நிலையில் இல்லை.

 முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாகவும் கூட  சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் பணம், மாநில அரசின் பணம் என எதுவுமே இல்லை. எல்லாம் மக்களின் பணம் என கூறிய அவர் மத்திய அரசுக்கு,  தென் மாநிலங்கள் தான் அதிகபட்ச வரி வருவாயை கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசு அந்த பணத்தை  வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டும் தான் செலவழிக்கிறது என ஆதாங்கம் தெரிவித்தார்.

மேலும் ஏன் இந்த பாகுபாட்டினை மத்திய காட்டுகிறது என கேள்வி எழுப்பிய அவர் ஆந்திரா இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்