காலாவதியான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் 2021-ம் ஆண்டு மார்ச் வரை செல்லும்

மாதிரிப் படம்

காலாவதியான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை செல்லும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் மார்ச் மாதத் தொடக்கத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. அதனையடுத்து, மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரப் பிறக்கப்பட்டது. அதன் காரணமாக, இந்தியா முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளின் அலுவல் பணிகளும் முழுமையாக முடங்கின. தற்போதுதான் இயல்புநிலை மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், பலருக்கும் வாகன ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடி காலம் நிறைவுபெற்றன. அதனால், பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் ஆர்.சி உள்ளிட்டவற்றை புதுப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

  அதனையடுத்து, காலாவதியான ஆவணங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தது. அவ்வப்போது இதன் காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை காலாவதியான ஆவணங்கள் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது, ஓட்டுநர் உரிமம் உள்பட்ட அனைத்து ஆவணங்களும் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் 2021-ம் ஆண்டு மார்ச் 31- வரை செல்லும். கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆவணங்களைப் புதுப்பிப்பதற்காக பொதுமக்கள் கூடும் வாய்ப்புள்ளதால் அதனை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: