Home /News /national /

90 வயதான பத்மஸ்ரீ கலைஞர் உட்பட பல கலைஞர்களை அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றிய மத்திய அரசு

90 வயதான பத்மஸ்ரீ கலைஞர் உட்பட பல கலைஞர்களை அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றிய மத்திய அரசு

பத்மஸ்ரீ விருது பெற்ற குரு மாயாதர் ராவத் 90 வயது முதியவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற குரு மாயாதர் ராவத் 90 வயது முதியவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

90 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசி நடனக் கலைஞர் குரு மாயாதர் ரவுத் தொடங்கி, அரசு விடுதி ஒதுக்கப்பட்ட பிரபல கலைஞர்களுக்கு எதிரான வெளியேற்ற நடவடிக்கைகளை டெல்லியில் மத்திய அரசு செவ்வாயன்று தொடங்கியது. இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த அரசு இல்லங்கள் 2014-ல் ரத்து செய்ய்ப்பட்டது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் கலைஞர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பிய பிறகு, மறைந்த பிர்ஜு மகராஜ் உட்பட ஒதுக்கப்பட்ட குழு நீதிமன்றத்தை நாடியது. ஒதுக்கப்பட்ட வீடுகளில் கலைஞர் ஜதின் தாஸ் மற்றும் சந்தூர் இசைக்கலைஞர் பண்டிட் பஜன் சோபோரி ஆகியோர் அடங்குவர்.

கலைஞரும் குரு மாயாதர் ராவுத்தின் மகளுமான மதுமிதா ரவுத் கூறும்போது புதன்கிழமையன்று கலைஞர்கள் வெளியேற்றத்திற்கு எதிரான வழக்கை தோற்றதாகவும் இங்குள்ள ஆசிய விளையாட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய ஏப்ரல் 25 வரை அவகாசம் இருந்ததாகவும் கூறினார். கலைஞர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இது புதன்கிழமை காலை விசாரணைக்கு வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதுதான் சமூக ஆர்வலர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் வேதனை அளிப்பதான விஷயமாக இருந்தது, “எங்களது மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு புதன் கிழமையன்று வருகிற்து என்று எஸ்டேட்ஸ் இயக்குனரகத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் போலீஸுடன் வந்து எங்கள் உடைமைகளை வலுக்கட்டாயமாக பறித்து வெளியே தூக்கி எறிந்தனர். அவர்கள் ஒரு மணிக்கு வந்தார்கள், என் 90 வயது அப்பாவுக்கு நான் சாப்பாடுப் போட்டுக் கொண்டிருந்தேன். என் தந்தை சாப்பிடும் வரை காத்திருக்குமாறு கெஞ்சினேன் ,ஆனால் அவர்கள் கேட்கவில்லை.” என்றார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் தற்காலிக நடவடிக்கையாக புதன்கிழமை வீட்டை காலி செய்து தனது தந்தையை ஒரு மாணவரின் வீட்டிற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மகள் ராவுத் கூறினார். அந்த வீடு 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தைக்கு ஒதுக்கப்பட்டது என்றார் அவர்.

‘காலி செய்வது பிரச்சனையல்ல, ஆனால் அதைச் செய்த விதம் மனிதாபிமானற்றது’

மேலும் ராவுத் கூறும்போது, “அவர்கள் வெளியேற்றினாலும் எனக்கு கவலையில்லை, ஆனால் அது நடந்த விதம் மனிதாபிமானமற்றது. குரு-சிஷ்ய பாரம்பரியத்துடன் பணிபுரியும், வணிக நலன்களைப் பற்றி கவலைப்படாத கலைஞர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. பத்ம விருது பெற்றவர்களை கவனிப்பது அரசின் பொறுப்பு இல்லையா? ” என்றார்

2014-க்குப் பிறகு ஒதுக்கப்பட்ட வீடுகளில் அதிகமாகத் தங்கியதற்காக, 27 கலைஞர்கள் திரட்டிய சேதக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய நவம்பர் 2020 இல், விடுதிக்கான அமைச்சரவைக் குழு முடிவுசெய்தது, மொத்தம் ₹32.09 கோடி, அவர்கள் வெளியேறுவதற்கு அந்த ஆண்டு டிசம்பர் 31 வரை அவகாசம் அளித்தது.

அரசின் கொள்கையின்படி, 40 கலைஞர்கள் மாதம் ₹20,000க்குள் சம்பாதித்தால், கலாச்சார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், பொதுக் குடியிருப்பு விடுதியில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தங்கும் இடம் ஒதுக்கப்படும்.

புதன்கிழமை கலைஞர்களுக்கு நீதிமன்றம் நிவாரணம் வழங்காததால் வெளியேற்றம் தொடரும் என்று எஸ்டேட்ஸ் இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீடுகள் ஒதுக்கப்பட்ட 28 கலைஞர்களில் 17 பேர் நோட்டீஸ் பெற்று வெளியேறியதாக அதிகாரி தெரிவித்தார். மற்றவர்கள் மீது ஒரு வாரத்திற்குள் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Published by:Muthukumar
First published:

அடுத்த செய்தி