CENTRE EMPHASIZES STATE GOVTS TO IMPLEMENT NO MASK NO SERVICE CAMPAIGN IN FULL SWING ARU
No mask, No service திட்டத்தை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
No mask, No service
கட்டுக்குள் இல்லாமல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை தடுத்து நிறுத்தும் நோக்கில் "No mask, No service" திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவதற்கு மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மால்களில், பெட்ரோல் பங்குகள், கேஸ் நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்களில் "No mask, No service" திட்டம் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது, இதன் காரணமாக மாஸ்க் அணியாதவர்களுக்கு எந்த சேவையும் கொடுக்கப்படாது என்ற திட்டத்தை செயல்படுத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது,
கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்ட போது பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு இருந்தது. பரவல் உச்சத்தில் இருந்த போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கொடுக்கப்படாது என்ற திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த செப்டருக்கு பிறகு கொரோனாவில் வேகம் சற்று ஓய்ந்தது. இதன் காரணமாக சகஜ நிலைக்கு திரும்பிய பொதுமக்கள், மாஸ்க் அணிவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர்.
இதனையடுத்து தற்போது கொரோனா பரவலின் தாக்கம் முன்பை விட தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ரோரின் 1.26 லட்சத்தை கடந்துள்ளது. இதனிடையே கொரோனா பரவல் தொடர்பாக இன்று மாநில முதல்வர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் கட்டுக்குள் இல்லாமல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை தடுத்து நிறுத்தும் நோக்கில் "No mask, No service" திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவதற்கு மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து மால்கள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், கேஸ் நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு எந்த சேவையும் வழங்கப்படாது. இன்று நடைபெறும் முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் பிரதமர் இதனை வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.