• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்

இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்

போக்குவரத்து

போக்குவரத்து

  • Share this:
    பொதுமக்கள் வெளியூர் செல்ல, வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அதில், தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்காக மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது எனவும், இதன் விளைவாக பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    இதை மீறி இபாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.



    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போகுவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மாவட்டங்களுக்குள் மட்டும் தனிநபர்கள் பயணிக்க அனுமதிக்க வழங்கப்பட்டது. வெளி மாவட்டங்கள், வ்ந்ளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்ப்ட்டாலும், போக்குவரத்துக்கு எந்த தளர்வும் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, தனிநபர் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அதேசமயம் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: