வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு

வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்ட விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
  • Share this:
விளைபொருட்களை பதுக்கி வைப்பதற்கு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானலும் விளைபொருட்களை இறுப்பு வைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியும். விவசாயிகளின் வருவாய் உயரும். இதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

அதே நேரத்தில், கடுமையான விலை உயர்வு, தேசியப் பேரிடர், யுத்தம் போன்ற காலகட்டங்களில் நுகர்வோரைப் பாதுகாக்கவும் சட்டத்தில் போதிய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.


மேலும், விவசாய விளை பொருட்களை விவசாயிகள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு அவசரச் சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரே நாடு ஒரே வணிக முறை சாத்தியமாகும் என்றும் அது கூறியுள்ளது.

விவசாயிகள் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பெரிய சில்லரை விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்துவோர், ஏற்றுமதியாளர்களிடம் நேரடி வணிகம் செய்ய மற்றொரு அவசரச் சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
Also see:
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading