இந்தியாவில் 13-வது தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படத்தின் கேப்ஷனில் ஸ்மிருதி ராணி, `நம்பிக்கையுடனும் உறுதியுடனும் வெவ்வேறு துறைகளில் சாதிக்கப் புறப்பட்டவர்கள் என்னுடைய மகள்கள்தான் என்னுடைய பெருமை. நாட்டினுடைய மகள்கள் என்று அவர்களை அழையுங்கள். அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
My daughters are my pride who have set out onto different frontiers with determination and confidence. Give a shoutout to a #DeshKiBeti and celebrate their achievements. pic.twitter.com/zr006SxJBR
ஸ்மிருதி இரானி பதிவிட்ட சிலமணி நேரங்களிலேயே 14,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் அந்த புகைப்படத்திற்கு கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாத நெட்டிசன்கள், ``உங்களது அழகான மகள்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அவர்கள் குடும்பத்தினரையும் தேசத்தையும் பெருமை கொள்ள செய்யட்டும்; வாழ்த்துக்கள்” போன்ற கமெண்டுகளை பதிவிட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.