'பி.எம். கேர் நிதி' அரசின் அமைப்பு அல்ல - RTI மூலம் கேள்வி எழுப்ப முடியாது என பிரதமர் அலுவலகம் விளக்கம்

”பி.எம். கேர் இணையதளத்தில் சென்று விவரங்களை அறியலாம்”

'பி.எம். கேர் நிதி' அரசின் அமைப்பு அல்ல - RTI மூலம் கேள்வி எழுப்ப முடியாது என  பிரதமர் அலுவலகம் விளக்கம்
பிரதமர் மோடி
  • Share this:
பி.எம். கேர் நிதி அரசு அமைப்பு அல்ல என்பதால், அதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோர முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அபய் குப்தா என்பவர், பிஎம் கேர் நிதி குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

பிஎம் கேர் நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை வந்துள்ளது? அதில் இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டிருந்தார்.


இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், பி.எம்.கேர் நிதி அமைப்பு அல்ல என்றும், எனவே அதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என்றும், எனினும் அதற்கான இணையதளத்தில் சென்று விவரங்களை அறியலாம் என்றும் கூறியுள்ளது.

Also read... பிரதமர் மோடி உடன் அமித்ஷா மீண்டும் சந்திப்பு - ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தது என்ன?
Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading