முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவுக்கு கூடுதலாக ₹3,048 கோடி நிவாரண நிதி: மத்திய அரசு அறிவிப்பு

கேரளாவுக்கு கூடுதலாக ₹3,048 கோடி நிவாரண நிதி: மத்திய அரசு அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கேரளாவுக்கு கூடுதலாக 3,048 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.

  • Last Updated :

கேரளாவுக்கு கூடுதலாக மூவாயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கேரளா மாநிலம் நிலைகுலைந்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கேரளாவுக்கு கூடுதலாக 3,048 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதேபோல் ஆந்திராவுக்கு 539 கோடி ரூபாயும், நாகாலாந்துக்கு 131 கோடி ரூபாயும் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விவசாயத் துறை அமைச்சர் ராஜா மோகன் சிங், உள்துறை செயலர் ராஜீவ் கவுபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கேரளாவுக்கு ரூ. 562 கோடி மற்றும் ரூ. 600 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கியிருந்தது.

Also watch

top videos

    First published:

    Tags: Kerala Flood