• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்த மத்திய அரசு - மாநிலங்கள் கடும் எதிர்ப்பு

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்த மத்திய அரசு - மாநிலங்கள் கடும் எதிர்ப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லை

இந்தியா-பாகிஸ்தான் எல்லை

பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

  • Share this:
    பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் மாநிலங்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. இம்மாநிலங்களில் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை சோதனை நடத்தவும், சந்தேகத்திற்கு உள்ளானவர்களை கைது செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு அண்மையில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலை மத்திய அரசு காரணம் காட்டியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதல் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பகுத்தறிவில்லாத இந்த முடிவை உடனடியாக திரும்பபெற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    பஞ்சாபில் மொத்தமுள்ள 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் எல்லை பாதுகாப்பு படையுன் வசம் சென்றுள்ளது. இப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு இனிமேல் எந்த அதிகாரமும் இருக்காது

    10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையினருக்கு ஏற்கெனவே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படையின் வரம்பு 80 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து 50 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: