வெளிமாநில ஊழியர்களுக்கு மாநில மொழிப்பயிற்சி வழங்குவதில்லை: மத்திய அரசின் பதிலால் அதிர்ச்சி

வெளிமாநில ஊழியர்களுக்கு மாநில மொழிப்பயிற்சி வழங்குவதில்லை: மத்திய அரசின் பதிலால் அதிர்ச்சி

வெளிமாநில ஊழியர்கள்

தமிழ் மொழி தெரியாததால், பொது மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், மொழிப்பயிற்சி வழங்கப்படுவதில்லை என்ற மத்திய அரசின் பதில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  வெளிமாநிலங்களில் வேலை செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அந்தந்த மாநில மொழிப் பயிற்சி ஏதும் கொடுக்கப்படுவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  சென்னையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசின் செயலகப் பயிற்சி மேலாண்மைப் பயிலகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் இரயில்வே, வங்கி, அஞ்சல் போன்ற பல்வேறு துறைகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

  அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால், பொது மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், மொழிப்பயிற்சி வழங்கப்படுவதில்லை என்ற மத்திய அரசின் பதில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: