முகப்பு /செய்தி /இந்தியா / திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு.. நாடாளுமன்றத்தில் பெருமிதமாக பேசிய குடியரசுத் தலைவர்..!

திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு.. நாடாளுமன்றத்தில் பெருமிதமாக பேசிய குடியரசுத் தலைவர்..!

குடியரசுத் தலைவர் உரை

குடியரசுத் தலைவர் உரை

திருவள்ளுவர் உள்ளிட்ட மகான்களின் வழியில் மத்திய அரசு செயல்படுவதாக குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது,

கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருப்பதாகவும், உலகிற்கு தீர்வுகளை வழங்கி வரும் இந்தியாவை உலகமே இன்று வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது முதல் முத்தலாக் ஒழிப்பு வரை அரசு முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாவும் முர்மு கூறினார்.

மத்திய அரசு, அனைத்துப் பிரிவினருக்கும் பாகுபாடுகள் இன்றி உழைத்துள்ளதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், 300 வகையான திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு 27 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டதாகவும் குடியரசு தலைவர் தெரிவித்தார். ஒருபுறம் மத்திய அரசு ஆதி சங்கரர், பசவேஸ்வரா, திருவள்ளுவர், குருநானக் தேவ் போன்ற மகான்கள் காட்டிய பாதையை பின்பற்றி வருகிறது. மற்றொரு புறம் உயர் தொழில்நுட்ப அறிவின் மையமாக இந்தியா மாறி வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

Budget 2023 Live: உடனுக்குடன் தகவல்கள் இங்கே

அரசின் திட்டங்கள் மற்றும் அமைப்புகளால் கொரோனா காலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள கோடிக்கணக்கான மக்களை இந்தியாவால் காப்பாற்ற முடிந்ததாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாகவும் முர்மு தெரிவித்தார். அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே முக்கிய அம்சமாக இருப்பதாகவும், பெண்களின் ஆரோக்கியமும் முன்பை விட மேம்பட்டுள்ளதாகவும் கூறினார்.

First published:

Tags: President Droupadi Murmu