காவிரி, கங்கை உள்பட 13 நதிகளுக்கு நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்டத்தை தயார் செய்யும் மத்திய அரசு

சுழற்சி முறையில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் நதிநீர்ப்படுகை ஆணையத்தின் தலைவராக செயல்படுவார்கள் என சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 3:47 PM IST
காவிரி, கங்கை உள்பட 13 நதிகளுக்கு நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்டத்தை தயார் செய்யும் மத்திய அரசு
நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்டம்
Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 3:47 PM IST
காவிரி, கங்கை, சிந்து உள்பட நாட்டிலுள்ள 13 நதிகளை, பிரத்யேக ஆணையம் ஒன்று மேலாண்மை செய்யும் வகையில், நதிநீர்ப் படுகை மேலாண்மை சட்ட முன்வரைவை மத்திய அரசு தயார் செய்துவருகிறது.

புதிய சட்ட முன்வரைவில் கங்கை, சிந்து, கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா உள்பட 13 நதிகளுக்கு நதிநீர்ப்படுகை ஆணையங்கள் அமைக்கப்படுமென ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த 13 ஆறுகளும் மத்திய நதிநீர்ப்படுகை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்குமென கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள், ஆற்றுப் படுகைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் அதிகாரம் பெற்றதாக இருக்கும்.

நதிநீர்ப் படுகை ஆணையத்தின் முடிவுகள், மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள தீர்ப்பாயங்களின் உத்தரவுகள் உள்பட அனைத்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு ஒரு குழுவும், நிர்வாகம் செய்ய ஒரு குழுவும் இந்த ஆணையத்தில் இடம்பெறும்.

புதிய ஆணையத்தில் மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்து திட்டங்களை செயல்படுத்துவதில் பங்காற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சுழற்சி முறையில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் நதிநீர்ப்படுகை ஆணையத்தின் தலைவராக செயல்படுவார்கள் என சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

Also watch: அதிரடி சலுகைகளுடன் ஜியோ பைபர் அறிமுகம்

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...