• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுமா?- மத்திய அரசு விளக்கம்

மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுமா?- மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

  • Share this:
    கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசின் அறிவியல் விவாதங்களிலோ, பொது சுகாதார வெளியிலோ தற்போதைக்கு இல்லை என்றும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடுவற்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது எனவும் இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

    இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “ஒன்றை நாம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசின் அறிவியல் விவாதங்களிலோ அல்லது பொது சுகாதார வெளியிலோ தற்போதைக்கு இல்லை. இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடுவற்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், இந்தியா மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேற்பட்ட 20 சதவீதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டதாக தெரிவித்தார். 62 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் போடப்பட்டிருப்பதாக கூறிய ராஜேஷ் பூஷண், சுகாதார பணியாளர்களில் 99 மற்றும் 82 சதவீதத்தினர் முறையே முதல் மற்றும் 2ஆவது டோஸ் போட்டிருப்பதாக கூறினார்.

    மேலும், முன்கள பணியாளர்கள் அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருக்கும் நிலையில், அவர்களில் 78 சதவீதத்தினர் 2ஆவது டோசையும் போட்டுக் கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 57 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. இவற்றையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 77 கோடியை கடந்து விட்டது.

    Must Read : தடுப்பூசி போட்டால் மட்டுமே முதியோர் பென்ஷன், தீபாவளிக்கு பணம்... ஆளுநர் அதிரடி

    இதில் 58.21 கோடி பேருக்கு முதல் டோஸ்களும், 18.96 கோடி பேருக்கு 2ஆவது டோசும் போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: