Home /News /national /

பிஜி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங், நீதிமன்ற தீர்ப்பு வரை நிறுத்தி வைக்கப்படும் : மத்திய அரசு உறுதி

பிஜி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங், நீதிமன்ற தீர்ப்பு வரை நிறுத்தி வைக்கப்படும் : மத்திய அரசு உறுதி

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்பு

பிஜி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் உட்பட மற்ற நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் உச்சநீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடங்களும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த ஜூலை 29ஆம் தேதி மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து நீட் தேர்வுக்கு மனு செய்துள்ள மாணவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதேபோன்ற மனுக்கள், பிற மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை முடிவதற்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட இறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும், இந்நிலையில், ரிட் மனு தாக்கல் செய்த மாணவர்கள், அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்று மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் நீதிமன்றத்தில் முறையிட்டுப் பேசினார்.

    இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் பதிலளித்து பேசினார். அப்போது, பிஜி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் உட்பட்ட மற்ற நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்பட மாட்டாது என்றும், உச்சநீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான ஒதுக்கீடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை எல்லா மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    Must Read : கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    மேலும், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக நீட் நிர்வாகத்திலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு மட்டுமானது என்றும், அது குறித்து மாணவர்கள் கவலைப்பட தேவை இல்லை எனவும் நடராஜர் விளக்கம் அளித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Medical counseling, Neet, Supreme court

    அடுத்த செய்தி