கொரோனா தடுப்பூசியை உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் வாங்கிக்கொள்ளலாம் - மத்திய அரசு

தடுப்பூசி

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியை உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

 • Share this:
  நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியை உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

  மே 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக தடுப்பூசி வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதித்து உள்ளது.

  இதற்காக தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி கொள்கை மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

  இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மே 5 ஆம் தேதிக்கு பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

  கடந்த சில நாட்களுக்கு முன்னர், சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.

  இந்நிலையில் நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  Must Read : ஏப்ரல் இறுதியில் கொரோனா 2ம் அலை உச்சகட்டத்தை எட்டும் - பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல்

   

  அதேபோல, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. நாடு முழுவதும் 13,23,30,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: