ஹோம் /நியூஸ் /இந்தியா /

வனப்பகுதிகள், வன விலங்குகளைப் பாதுகாக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி!

வனப்பகுதிகள், வன விலங்குகளைப் பாதுகாக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி!

காட்டில் உள்ள விலங்குகள்

காட்டில் உள்ள விலங்குகள்

இந்த நிதியை வனத்துறை ஊழியர்களின் சம்பளம், பயணம் உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் வனப்பகுதிகளை மேம்படுத்த மட்டுமே இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வனப்பகுதிகள் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்க தமிழகம் உள்பட 27 மாநில அரசுகளுக்கு 47,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

காடுகள், பசுமைப் பிரதேசங்களில் தீ விபத்துகளைத் தவிர்க்கவும், வனவிலங்குகள் பெருக்கத்தை அதிகரிக்கவும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வனப்பகுதிகள் மிக்க ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் தொழிற்சாலைகள், உள்கட்டமைப்புகள், சுரங்கம் போன்றவற்றை அமைத்தற்காக ஈடு செய்யும் வகையில் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 55,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனை வனத்துறை வளர்ச்சிக்கே செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை வனத்துறை ஊழியர்களின் சம்பளம், பயணம் உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் வனப்பகுதிகளை மேம்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியை பயன்படுத்துவது தொடர்பான வழக்குகளிலும் சரியான முறையில் செலவிடுவது குறித்து மத்திய அரசு திட்டமிடுதல் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றமும் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க... நண்பரிடம் வழிப்பறி செய்ய வேண்டாம் என தடுத்த அஜீத் ரசிகர்

First published:

Tags: Central government, Forest Department