மேகதாது அணை விவகாரம்... முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டம்

கோப்பு படம்

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுத புதுச்சேரி அரசும் திட்டமிட்டுள்ளது.

 • Share this:
  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தென்மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து சுமுகமாக பேசி முடிவு காணும் வகையில் இந்த ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதால் நாட்டின் தென் பகுதிகளிலுள்ள மற்ற மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிற மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முவைத்து வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த விவகாரத்தில் சுமுக முடிவு காணும் வகையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய நான்கு மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.

  இந்த 4 மாநிலங்களின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படியில் மேகதாது விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நான்கு மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

  இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், தமிழக அரசைப்போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் நேற்று சந்தித்து மனு கொடுத்தார்.

  இந்நிலையில், புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், காரைக்காலை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கான அமைச்சர் சந்திர பிரியங்கா, திருமுருகன், பி.ஆர். சிவா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Must Read : ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன... நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும் - நடிகர் வடிவேலு

  காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும் என்பதை இக்கூட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்வைத்தார்.

  இந்நிலையில், கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரம் தற்போது ஐந்து மாநில விவகாரமாக உருவெடுத்துள்ளது.
  Published by:Suresh V
  First published: