கொரோனா வைரஸ் பாதிப்பு: ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டத்தில் மத்திய அரசு

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டத்தில் மத்திய அரசு
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவு காலம் ஏப்ரல் 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், ஊரடங்கு உத்தரவை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை பல மாநில அரசுகளும் வலியுறுத்தின. அதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இதுவரையில், கொரோனா வைரஸால் 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also see:


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading