தடுப்பூசிகளை கொண்டு செல்லும் டிரோன்... ஆர்வம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

டிரோன்

கொரோனா தடுப்பூசிகளை டிரோன்கள் மூலம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வை கான்பூர் ஐஐடி- நிறுவனட்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

  • Share this:
    நாடு முழுவதிலும் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகளில் மத்திய-மாநில அரசுகள் தீவிர செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசிகள், அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என திட்டமிட்டு வருகின்றன. அதன்படி, தொலைதூர பகுதிகள் மற்றும் செல்வதற்கு கடினமான இடங்களுக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்க்க மத்திய அரசு உரிய வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது.

    நேரடியாகச் செல்வதற்குக் கடினமான பகுதிகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்க டிரோன்களை பயன்படுத்த முயற்சிக்குமாறு மத்திய அரசு கோரியது. அதன்படி தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை டிரோன்கள் மூலம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வை கான்பூர் ஐஐடியுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதன் முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் டிரோன்கள் மூலம் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதற்கான நிலையான நெறிமுறை ஒன்றை வகுத்துள்ளது. அத்துடன் இந்த பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதற்காக, நிர்ணயிக்கப்பட்ட நீண்டதூர பாதையில் டிரோன் மூலம் தடுப்பூசியை வினியோகிக்கவும், மீண்டும் அதே இடத்துக்கு டிரோனை கொண்டு சேர்க்கவும் முடிந்த ஆபரேட்டர்களிடம் டெண்டர் தொடர்பாக ஐசிஎம்ஆர் பேச்சுவார்த்தை நடத்தும். குறிப்பாக, 4 கிலோ எடையுடன் செங்குத்தாக மேலெழும்பி, வான் வழியாக 35 கிலோ மீட்டர் தொலைவு வரை, சென்று வரும் திறன்பெற்றதாக டிரோன்கள் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த டிரோன்களுக்கான பணிக்காலம் 90 நாட்களாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. தற்போது டிரோன் ஆபரேட்டரின் திறமை மற்றும் திட்டத்துக்கான தேவைகளின் அடிப்படையில் இந்த பணிக்காலம் நீட்டிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    Must Read : ஒரே நாளில் 164.87 கோடி ரூபாய்க்கு மது விற்பனை - சென்னையை முந்திய மதுரை

    இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் நேற்று இரவு 7 மணி நிலவரப் படி 25 கோடியே 87 லட்சத்து 13ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published: