ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டம்

கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டம்

தடுப்பூசி

தடுப்பூசி

ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவில் டெல்டா வகை தொற்று பரவலே இன்னும் முழுமையாக ஒழியாத நிலையில், கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 25 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்த அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினரும், மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா கிருமியைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்கள், மூன்றாவது டோஸை தாராளமாக செலுத்திக் கொள்ளலாம் என, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்தும், கொல்லப்பட்ட கொரோனா வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

Also Read : Omicron தொற்று பரவல்: மும்பையில் 144 தடை உத்தரவு அமல்

இந்த சூழலில், வியாழக்கிழமை அன்று சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, தேவைப்பட்டால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு வெள்ளிக்கிழமை அன்று ஆலோசனை மேற்கொண்டது. அதில், கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கக்கோரி, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு விரைவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Corona Vaccine, Omicron