Home /News /national /

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை... மாநில அரசுகள் குறைக்கக் கூடாது என மத்திய அரசு திட்டவட்டம்...!

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை... மாநில அரசுகள் குறைக்கக் கூடாது என மத்திய அரசு திட்டவட்டம்...!

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள அபராதத் தொகையையே மாநிலங்கள் தன்னிச்சையாக குறைக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி 24 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை மற்றும் தண்டனை 10 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டது.

ஆனால், இந்த விதிகளை முழுமையாக அமல்படுத்த சில மாநிலங்கள் மறுத்துவிட்டன. குஜராத் மாநில அரசு அபராதத் தொகையை குறைத்து உத்தரவிட்டது. தமிழகத்திலும் தற்போது வரை பழைய முறையிலேயே அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சில மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடின. இந்நிலையில் மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை மாநிலங்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்கலை மீறுவது அரசியல் சாசனத்தில் 356 பிரிவின்கீழ் குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் திருத்தப்பட்ட போக்குவரத்து சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அப்படியே அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

புதிய மோட்டார் வாகனத்திருத்த சட்டத்தின் படி அதிகரிக்கப்பட்ட அபராதத்தொகை விபரங்களை கீழே அட்டவணையில் பார்க்கலாம்...



























































































































Section/ OffenceOld PenaltyNew Penalty (Minimum)
General (177)Rs 100Rs 500
Rules of road regulation violation (new 177A)Rs. 100Rs 500
Travelling without a ticket (178)Rs 200Rs 500
Disobedience of orders of authorities (179)Rs 500Rs 2000
Unauthorized use of vehicles without licence (180)Rs 1000Rs 5000
Driving without licence (181)Rs 500Rs 5000
Driving without qualification (182)Rs 500Rs 10,000
Oversized vehicles (182B)NewRs 5000
Over speeding (183)Rs 400Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle
Dangerous driving penalty (184)Rs. 1,000Upto Rs 5000
Drunken driving (185)Rs 2000Rs 10,000
Speeding/ Racing (189)Rs 500Rs 5,000
Vehicle without permit (192A)Upto Rs 5000Upto Rs 10,000
Aggregators (violations of licencing conditions) (193)NewRs 25,000 to Rs 1,00,000
Overloading (194)Rs 2,000, and Rs 1,000 per extra tonneRs 20,000, and Rs 2,000 per extra tonne
Overloading of Passengers (194A)N.A.Rs 1000 per extra passenger
Seat Belt (194 B)Rs 100Rs 1,000
Overloading of two-wheelers (194 C)Rs 100Rs 2,000 , Disqualification of licence for 3 months
Not providing way for emergency vehicles (194E)NewRs 10,000
Driving without insuarance (196)Rs 1,000Rs 2,000
Offences by Juveniles (199)NewGuardian/ Owner shall be deemed guilty. Rs 25,000 with 3 years imprisonment. Juvenile to be tried under JJ Act. Registration of Motor Vehicle to be cancelled.
Power of officers to impound documents (206)N.A.Suspension of driving licence under sections 183, 184, 185, 189, 190, 194C, 194D, 194E,
Offences committed by enforcing authorities (210B)N.A.Twice the penalty under the relevant section

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Motor Vehicles Amendment Bill 2019, Traffic Rules

அடுத்த செய்தி