ஆக்சிஜன் ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டண தள்ளுபடி: துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

ஆக்சிஜன் ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டண தள்ளுபடி: துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

துறைமுகம்

ஆக்சிஜன், அது சார்ந்த உபகரணங்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யுமாறு முக்கிய துறைமுகங்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  ஆக்சிஜன், அது சார்ந்த உபகரணங்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யுமாறு முக்கிய துறைமுகங்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அது சார்ந்த உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவம் சார்ந்த உபகரணங்களைக் கொண்டு வரும் கப்பல்களுக்கு துறைமுகத்தில் முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்குமாறு துறைமுக பொறுப்பு கழகங்களுக்கு துறைமுக அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

  அத்துடன் ஆக்சிஜன், அது சார்ந்த உபகரணங்களை கப்பலில் இருந்து தாமதமின்றி இறக்குவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். துறைமுகத்தில் இருந்து அவற்றை விரைவாக வெளியே அனுப்புவதற்கு சுங்கத்துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் துறைமுக பொறுப்பு கழக தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பிற சரக்குகளுடன் ஆக்சிஜனை ஏற்றிவரும் கப்பல்களுக்கு அதன் தகவுக்கு ஏற்ப கட்டணத் தள்ளுபடி வழங்க வேண்டும், ஆக்சிஜன் ஏற்றிவரும் கப்பல்கள், துறைமுகத்தில் நிறுத்தப்படும் நேரம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் கொண்டுவரும் கப்பல்களுக்கான கட்டணத் தள்ளுபடி உத்தரவு, அடுத்த 3 மாதங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 3,49,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,69,60,172 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.

  Must Read : இந்தியாவில் 2வது அலை தீவிரம் - உலக நாடுகள் கவலை

   

  இதனால், நாடு முழுவதும் ஆக்கிஜன் தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: