வாகனங்களுக்கான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தது மத்திய அரசு

வாகனங்கள்

கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால் நாடு முழுவதும் வழக்கமாக நடைபெறும் பல்வேறு நடைமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல மாநிலங்கள் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. தளர்வுகளுடன் நடை முறையில் உள்ளன. அத்துடன், பல்வேறு நலத்திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் பொருட்டும் போக்குவரத்து துறை தொடர்பான பணிகளுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. அதில், முக்கியமாக, வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை, காலாவதியாகும் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), லைசென்ஸ், தகுதி சான்று, அனுமதி (அனைத்து வகை) உள்ளிட்ட வாகனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், இந்த உத்தரவை அனைவரும் தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தகுதி சான்றிதழ் பெற்றுதான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Must Read : அன்று மு.கருணாநிதி இன்று மு.க.ஸ்டாலின் : முதலமைச்சரின் டெல்லி பயண சுவாரஸ்யங்கள்!

15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த நிலையில் புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: