பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு

பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு

டெல்லி விவசாயிகள் போராட்டம்

வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறும் வரையில், போராட்டம் நடத்தப்படும் என் அறிவித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
வேளாண் சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள், பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள், கடும் பனியையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு முன்னர் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 3 சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில், போராட்டம் நடத்தப்படும் என் அறிவித்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

வேளாண் சீர்திருத்த சட்டங்களில் முக்கிய திருத்ததங்களை செய்ய அரசு முன்வந்தது. எனினும் போராடும் விவசாயிகள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில், வரும் 30-ஆம்தேதிக்குள் பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: