ரஃபேல் ஒப்பந்தம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்!

ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, இன்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆவணங்களை  மறுசீராய்வுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்!
ரஃபேல் போர் விமானம்
  • News18
  • Last Updated: May 4, 2019, 3:48 PM IST
  • Share this:
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.


ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான சில ஆவணங்களை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரினர். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டிருந்த மத்திய அரசு, இன்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

அதில் ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆவணங்களை  மறுசீராய்வுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.Also see...

First published: May 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading