இந்தியாவில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்படுமா? - மத்திய அரசு விளக்கம்

கோவிட் தடுப்பூசி

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன.

  • Share this:
    நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, இது குறித்து கூறுகையில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக வழங்குவதில்தான் முதன்மையான கவனம் செலுத்தப்படுகிறது.

    இது வரை பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்கவே இல்லை. அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி என்ற முதன்மையான நோக்கம் நிறைவேறிய பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பற்றி கவனத்தில் கொள்ளப்படும்.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன. தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முறை பின்பற்றப்பட வேண்டுமா என்பதை ஆய்வுகள் மட்டுமே வழி நடத்தும்.

    தடுப்பூசிக்கு பிறகு பொதுவான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிறது. அதே நேரத்தில் ‘டி’ செல்நோய் எதிர்ப்புசக்தியும் உள்ளது. எந்த எதிர்ப்புச்சக்தி இழக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பது கடினம். அறிவியல் சான்றுகள் மட்டுமே இதுபோன்ற முடிவுகளுக்கு வழிநடத்தும். இப்போதைக்கு, அனைவருக்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்டபடி தடுப்பூசிகளை போடுவதுதான் எங்களது முதன்மையான திட்டம்” இவ்வாறு கூறினார்.

    Must Read : பேங்க் லாக்கருக்கு புதிய விதிகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 56.06 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் 24 மணிநேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 56,06,52,030 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்களிடம் 94,03,637 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அந்தநாட்டின் எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பைசர்-பயோ என்டெக், மாடர்னா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்க்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: