Home /News /national /

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்தியன் ரயில்வே!

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்தியன் ரயில்வே!

தேஜஸ் ரயில்

தேஜஸ் ரயில்

தேஜாஸ் ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்காக ஆட்டோமேடிக் டீ மற்றும் காஃபி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India
    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி நீங்கள் அலுவல் ரீதியான சுற்றுலாப் பயணங்களை தேஜாஸ் ரயில் மூலமாக மேற்கொள்ளலாம். பொதுவாக டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்வாக இருக்கின்ற தேஜாஸ் ரயில்களில் இனி அரசு அலுவலர்களுக்கு சலுகை அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்பட இருக்கிறது.

    இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. அரசு வெளியிட்ட அறிவிக்கையின்படி, “இந்த கட்டணச் சலுகை என்பது சுற்றுலா, பயிற்சி கூட்டங்கள், பணியிட மாற்றங்கள் போன்ற பயணங்களுக்கு பொருந்தும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்புகையிலும் இந்தப் பயணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். தேஜாஸ் ரயில்களில் பயணம் செய்வதற்கான தகுதி என்பது சதாப்தி ரயில் பயணங்களுக்கான அதே தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    தேஜாஸ் ரயிலை ப்ரீமியம் ரயில்களின் பட்டியலில் சேர்த்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் அலுவல் ரீதியிலான பயணங்களையும் இதில் மேற்கொள்ளலாம்.

    எந்தவொரு மத்திய அரசு பணியாளரும் இந்தச் சலுகையை பயன்படுத்த முடியுமா, முடியாதா என்பதை அவரது ஊதிய அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட உள்ளது. ப்ரீமியம் ரயில்கள், ப்ரீமியம் தட்கல் ரயில்கள், ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்கள் ஆகியவற்றில் மத்திய அரசு அதிகாரிகள் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தேஜாஸ் ரயில்களில் என்னென்ன வசதிகள் உண்டு?

    தேஜாஸ் ரயில் பெட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயார் செய்யப்படுகின்றன. மொத்தம் 20 பெட்டிகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக தானியங்கி கதவுகளுடன் அமைந்த ரயில் இதுவாகும்.

    தேஜாஸ் ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்காக ஆட்டோமேடிக் டீ மற்றும் காஃபி மெஷின்கள் உள்ளன. ஒவ்வொரு பயணியின் சீட்டுக்கும் தனித்தனி எல்சிடி டிவி மற்றும் வைஃபை இன்டர்நெட் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.

     

    இது மட்டுமல்லாமல், பயோ டாய்லட், ஈரமான கைகளை காய வைப்பதற்கான மெஷின் போன்றவை இடம்பெற்றுள்ளன. நாட்டில் பிரத்யேகமான வசதிகளுடன் இயக்கப்படும் அதிவேக ரயில்களான வந்தே பாரத் மற்றும் காதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பட்டியலில் தேஜாஸ் ரயிலும் ஒன்றாகும்.

    Read More: டோல்கேட் இனி இருக்காது, ஆனால் புது ட்விஸ்ட் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

    பயணத்தை தொடங்கும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி 3 வந்தே பாரத் ரயில்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு அடைந்துள்ளது. முதலாவது வந்தே பாரத் சேவையானது தீபாவளி அல்லது தசரா பண்டிகைக்கு முன்பாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை - அஹமதாபாத் நகரங்கள் இடையே முதல் சேவை தொடங்க உள்ளது.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Central government, Government Employees, Tejas Express, Trip

    அடுத்த செய்தி