ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாடு முழுவதும் குப்பை கழிவுகளை நீக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.342.63 கோடி வருவாய் - மத்திய அமைச்சர் தகவல்!

நாடு முழுவதும் குப்பை கழிவுகளை நீக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.342.63 கோடி வருவாய் - மத்திய அமைச்சர் தகவல்!

மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்

மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்

ஒரு மாத காலத்தில் கழிவுகள் நீக்கம், கழிவு மேலாண்மை மூலம் ரூ.364.63 கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாடு முழுவதும் சிறப்புத் தூய்மை இயக்கம் என்ற ஒரு மாத சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு அக்டோபர் மாதம் மேற்கொண்டது. காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 தொடங்கி 31ஆம் தேதி வரை இந்த திட்டத்தை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மேற்கொண்டன. இதன் பலன்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் வெளியிட்டார். அதன்படி, கடந்த ஒரு மாத காலத்தில் கழிவுகள் நீக்கம், கழிவு மேலாண்மை மூலம் ரூ.364.63 கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

  அமைச்சர் அளித்த தகவலின் படி, இந்த தூய்மை இயக்க திட்டமானது 99 ஆயிரத்து 633 இடங்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த காலத்தில் சுமார் 54.5 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து 4.34 லட்சம் குறைகள் கேட்டு சரி செய்யப்பட்டது. அரசின் ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு இந்த திட்டம் சிறந்த உதாரணம். மத்திய அமைச்சகங்கள் பலவும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்த செயல்பட்ட நல்ல பலன்களை பெற்று தந்துள்ளன. திட கழிவு மேலாண்மை மூலம் அதிகபட்சமாக ராணுவ விவகாரங்களுக்கான துறை ரூ.212.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்தபடியாக நிலக்கரி அமைச்சகம் ரூ.48.51 கோடி, தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் ரூ.33.05 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

  இதையும் படிங்க: ஆதார் இல்லாததால் கர்நாடகாவில் தமிழக கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு.... தாயும், இரட்டை சிசுவும் உயிரிழப்பு

  இந்த திட்டத்தின் மூலம் சுமார் 88.05 லட்சம் சதுர அடி இடம் கழிவு ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டன. இவை பொது பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும். இந்த சிறப்பு திட்டம் அக்டோபர் 31ஆம் தேதி முடிந்தாலும், இந்த வழிமுறையை தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Clean india, Cleanliness