ஹோம் /நியூஸ் /இந்தியா /

சேது சமுத்திர பகுதி.. நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்

சேது சமுத்திர பகுதி.. நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்

சேது சமூத்திரம் திட்டம்

சேது சமூத்திரம் திட்டம்

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 12ம் தேதியே பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்வதாக கூறியிருந்தது,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சேது சமுத்திர பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பான முடிவை பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்வதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான சுப்ரமணியன் சுவாமி ராமர் பாலம் தொடர்பாக தாக்கல் செய்த பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, "இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 12ம் தேதியே பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்வதாக கூறியிருந்தது, ஆனால் இதுவரை அதனை தாக்கல் செய்யவில்லை" என கூறினார்.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக பரிசீலித்து வருவதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரினார். அந்த கோரிக்கையை ஏற்று வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2வது வரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

First published:

Tags: Sethusamudram Project, Subramaniyan swamy, Supreme court