Home /News /national /

முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..

முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..

முகக்கவசங்கள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

முகக்கவசங்கள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

என்-95 மற்றும் எஃப்.எஃப்.பி.2 முகக்கவசங்கள் தற்போது உலகம் முழுவதும் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார் பியூஷ் கோயல்

    கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முகக்கவசங்கள், கவச உடைகளின் தேவை அதிகரித்ததால், என்-95 உள்ளிட்ட முகக்கவசம், கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. ஆனால் தற்போது உள்நாட்டு சந்தையில் போதிய அளவில் தயாரிப்புகளின் இருப்பு இருப்பதால் அனைத்து விதமான முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு நேற்று நீக்கியுள்ளது.
    இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக அறிவிப்பில், முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கு அனுமதிக்கப்படுகிறது என அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தொழிற்சாலைகள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    இந்த நடவடிக்கை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது ட்விட்டர் தளத்தில், ‘உலகிற்காக இந்தியா உருவாக்குகிறது: என்-95 மற்றும் எஃப்.எஃப்.பி.2 முகக்கவசங்கள் தற்போது உலகம் முழுவதும் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Mask

    அடுத்த செய்தி