• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Neet Exam: நீட் தேர்வு தேதி அறிவிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

Neet Exam: நீட் தேர்வு தேதி அறிவிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தன.  எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு  நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது

  • Share this:
மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு  தேர்வு நாடு  முழுவதும் வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மே மாதத்தில் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எனினும், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நீதி தேர்வு நடத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடப்பு ஆண்டில் கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தன.  எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு  நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. மேலும், கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தேர்வு தள்ளிப்போக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க: பாடப்புத்தகங்களில் கருணாநிதி வாழ்க்கை வரலாறு: லியோனி தகவல்...

இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சராக  தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டார்.இதை தொடர்ந்து நீட் தேர்வு தேதி தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. நீட் தேர்வுக்கு 60 நாள்களுக்கு முன்பு, விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கும். ஆனால் இதுவரை விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கவில்லை. எனவே தேர்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறலாம் என கருதப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது அணையை கட்டியே தீருவோம்- கர்நாடக உள்துறை அமைச்சர் பிடிவாதம்!


கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ள அவர், சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல், கடந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3862 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: