கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்தியக் குழு ஆலோசனை

மாதிரிப் படம்

கேரளாவில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று மத்தியக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத்தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். அதன்காரணமாக இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. தற்போது, கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துவந்தது. இந்தநிலையில், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    அதனையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகலயா, ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய பத்து மாநிலங்களில் மேற்கொண்டது. குறிப்பாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் அதிகரித்துவருகிறது. நேற்று, 30,000 வரையில் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 42,000-க்கும் கூடுதலாக பதிவாகியுள்ளது.

    அதிகரிக்கும் கொரோனா: பேரழிவு ஏற்பட்டுவிடும் -தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை


     இதற்கிடையில், கேரளாவில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டது. நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு கேரளாவில் 7 மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.


    எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், மலப்புரம், கோட்டயம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கேரள அரசுக்கு மத்தியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்படி, ‘கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிகமான சோதனைகள், தொடர்புகளைக் கண்டறிதல், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பதிவாகும் கொரோனா பாதிப்பில் 50 சதவீகிதம் கேரளாவில் இருந்தே பதிவாகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: