வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலவச அரிசி வழங்க கேரள அரசு கோரிக்கை! நிராகரித்த மத்திய அரசு

2018-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக கேரள மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலவச அரிசி வழங்க கேரள அரசு கோரிக்கை! நிராகரித்த மத்திய அரசு
கேரள வெள்ளம்
  • News18
  • Last Updated: September 2, 2019, 6:25 PM IST
  • Share this:
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு இலவசமாக அரசி வழங்க வேண்டும் என்று கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வயநாடு, ஆலப்புழா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலவசமாக அரிசி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கைவைத்தது. ஆனால், கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் ஒரு கிலோ அரசிக்கு 26 ரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக கேரள மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கேரளா மாநிலம் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதும், இலவசமாக அரசி வழங்குவதற்கு கேரள அரசு மத்திய அரசுக்கு கோரிக்கைவைத்திருந்தது.


ஆனால், மத்திய அரசு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. மத்திய அரசு வழங்கிய அரிசிக்கான பணத்தை, கேரள அரசால் திரும்பச் செலுத்த முடியாமல் போனது. அதனால், கேரள அரசு வழங்கிய நிவாரண நிதியிலிருந்து அரிசிக்கான பணத்தை பிடித்தம் செய்துகொண்டது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு மிகப்பெரிய கண்டனங்கள் எழுந்தன.

Also see:

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...