மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு

மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி

இந்தியா முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார்துறையில் பணியாற்றும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடப்படுவருகிறது.

  இந்தநிலையில், இரண்டாவது கட்டமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். நாடு முழுவதும் 10,000 அரசு மருத்துவ மையங்களும், 20,000 தனியார் மருத்துவமையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும். அரசு மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: