கொரோனா தடுப்பூசிக் கள்ளச் சந்தையை மத்திய அரசு ஊக்குவிக்கிறது: ஐகோர்ட்டில் கேரளா பகீர் குற்றச்சாட்டு

கேரளா உயர் நீதிமன்றம்.

தடுப்பூசிக் கள்ளச் சந்தையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று கேரளா கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

 • Share this:
  கொரோனா தடுப்பூசிக் கொள்கைகள் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், சமூக தொண்டர்களும் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் தடுப்பூசிக் கள்ளச் சந்தையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று கேரளா கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

  கொரோனா தடுப்பூசி கொள்கை தொடர்பான வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு கேரள அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. அப்போது, மத்திய அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

  Also Read: யாருமே உரிமை கோராத ஆயிரக் கணக்கான கொரோனா நோயாளிகள் உடல்கள் பெங்களூருவில் எரிப்பு

  இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.முகமது முஸ்தாக், கவுசர் எப்பாகாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

  அப்போது கேரள அரசு, "கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் கள்ளச்சந்தைகளில் இருந்து எளிதில் பெற்றுவிடுகின்றன. ஆனால், அரசாங்கம் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தவிக்கிறது. மருந்து நிறுவனங்கள் இதுபோன்ற இக்கட்டான சூழலில் ஆதிக்கம் செலுத்த வழிசெய்யக்கூடாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு கட்டணக் கொள்ளை நடக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் கைகோத்து அவற்றின் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க தனியார் மருத்துவமனை ஒப்பந்தம் செய்துகொண்டு லாபம் அடைகிறது.

  Also Read: கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த வில்லங்க மாமியார்!

  கோவின் ஆப் மூலம் பதிவு செய்தே கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை தனியார் மருத்துவமனைகள் மீறுகின்றன. கரோனா தடுப்பூசி கள்ளச்சந்தையை மத்திய அரசு ஊக்குவிக்கிறது" எனத் தெரிவித்தது.

  இதனை கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம் " மாநில அரசுகளும் தடுப்பூசிக்கு பணம் தர முன்வரும்போது, ஏன் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது" என்று வினவினர்.

  மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
  Published by:Muthukumar
  First published: