• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அதிகரிக்கும் வெங்காய விலை! ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு

அதிகரிக்கும் வெங்காய விலை! ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு

கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் வரையில் விற்க்கப்பட்டது. அதனால், வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவந்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெங்காயத்தின் விலை அதிகரித்துவருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. உடனடியாக இந்த உத்தரவு அமலுக்குவந்தது.

    ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 30 சதவீதம் மட்டுமே விளைவிக்கப்பட்டு வரும் நிலையில், அண்மையில் பெய்த மழையால் வெங்காயத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டுவருவது தடைபட்டுள்ளது.

    அதன் காரணமாக தமிழ்நாடு உள்பட்ட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் வரையில் விற்க்கப்பட்டது. அதனால், வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவந்தன. இந்தநிலையில், வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், வெங்காயத்தின் புழக்கத்தை அதிகரிக்கவும், அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடைவிதித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்மூலம், 50 ஆயிரம் டன் வரை வெங்காயம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: