ஹோம் /நியூஸ் /இந்தியா /

கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பிரபல ஆடை வடிவமைப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பிரபல ஆடை வடிவமைப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா மரணம்

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா மரணம்

உயிரிழந்த பிரத்தியுஷாவுக்கு அருகே கார்பன் மோனாக்ஸைடு வாயு அடைத்திருந்த பாட்டிலை காவல்துறையினர் கைப்பற்றினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமல்லா தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 36 வயதான பிரத்யுஷா தெலுங்கு மற்றும் பாலிவுட் திரை உலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

இவர் ஹைதராபத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வரும் நிலையில், நேற்று அவர் நீண்ட நேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு சென்ற காவல்துறையினர் பிரத்யுஷாவை அவரது குளியல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். அவருக்கு அருகே கார்பன் மோனாக்ஸைடு வாயு அடைத்திருந்த பாட்டிலை காவல்துறை கைப்பற்றினர். இந்த ரசாயன வாயு மூலமாக தான் இவர் உயிரிழந்திருக்கக் கூடும் என காவல்துறை சந்தேகிக்கிறது.

அத்துடன் பிரத்தயுஷா எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. அதில், 'நான் தனிமையான வாழ்க்கை வாழ்கிறேன், இந்த வாழ்க்கையை நான் விரும்பவில்லை. எனது பெற்றோருக்கு சுமையாகவும் நான் இருக்க விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள்' என எழுதி வைத்துள்ளார். இவர் தற்கொலை மூலமாகத் தான் உயிரிழந்துள்ளார் என உடற்கூறு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. இருப்பினும் வீட்டில் தனியாக இருந்த பிரத்யுஷா உயிரிழந்துள்ளதால் இந்த மரணத்தில் வேறு ஏதும் காரணிகள் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் 2வது நாளாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

இவர் பாலிவுட் பிரபலங்களான மதுரி தீக்ஷித், ஜுஹி சாவ்லா, ஜாக்குலின் பென்ரான்டஸ் ஆகிய பலருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். இவர் மரணம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனாவும் பிரத்யுஷாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Commit suicide, Fashion designer