தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாட காரணமான எம் விஸ்வேஸ்வரயா யார்? அவர் செய்த சாதனைகள் என்ன?

தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாட காரணமான எம் விஸ்வேஸ்வரயா யார்? அவர் செய்த சாதனைகள் என்ன?

எம்.விஸ்வேஷ்வரயா

இந்தியாவின் சிறந்த பொறியாளராக அறியப்பட்ட சர்.எம்.விஸ்வேஸ்வரயாவின் பிறந்தநாளை நினைவு கூறும் தினமே "தேசிய பொறியாளர்கள் தினம்" ஆகும்.

 • Share this:
  செப்டம்பர் 15ம் தேதி இந்தியாவில் "தேசிய பொறியாளர்கள் தினமாக" கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. சிவில் முதல் மெக்கானிக்கல் வரை உள்கட்டமைப்பின் முதுகெலும்பை அவர்கள் உருவாக்குகின்றனர். நாம் வசிக்கும் கட்டிடங்கள், நாம் பயன்படுத்தும் கணினிகள் - எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பொறியாளர் இருக்கிறார்.

  இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியலாளர்களில் ஒருவரான “மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயாவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில்” தான் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள முத்தநஹள்ளி என்ற சிறிய கிராமத்தில், 'மோட்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயா' செப்டம்பர் 15, 1861 இல் பிறந்தார். இந்த துறையில் அவர் செய்த பல்வேறு பங்களிப்புகள் மற்றும் கல்வியின் முன்னோடியாக இருந்ததால், அவர் “வி.எம் சர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

  வி.எம் சர் பெற்றோர்கள் இருவரும் சமஸ்கிருத அறிஞர்கள் ஆவர். அவர் தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற பின்னர், உயர் கல்விக்காக பெங்களூருக்கு சென்று, கலைகளில் இளங்கலை படித்தார். ஆனால் அவர் ஒரு புதுமைப்பித்தன் என்பதை அவர் எப்போதும் அறிந்திருந்தார். அதன்பின்பு புனே பொறியியல் கல்லூரியில், சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

  அவரது நிபுணத்துவம் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ள பேரழிவு மேலாண்மை ஆகிய துறைகளில் இருந்தது. நவீன நீர்ப்பாசன நுட்பங்கள் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் தணிப்பு துறைகளில் அவர் உருவாக்கிய படைப்புகள் அவருக்கு புகழ் வெளிச்சத்தைக் கொடுத்தது. 1903ம் ஆண்டில் புனேவில் கடக்வஸ்லா நீர்த்தேக்கத்தில் நிறுவப்பட்ட ‘தானியங்கி தடை நீர் வெள்ள வாயில்களை’ அவர் வடிவமைத்தார்.

  பின்னர் அவர் இந்தியாவின் மிகப்பெரிய அணையான 'கிருஷானசாகர்' அணையின் கட்டிடக் கலைஞராக மாறினார். நான்கு தசாப்தங்களாக பொறியியலாளராக பணியாற்றிய பின்னர், புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரியை 1917ம் ஆண்டில் நிறுவினார். தற்போது பல்கலைக்கழக விஸ்வேஸ்வரயா பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படும் இந்த கல்லூரியானது, இந்தியாவின் ஐந்தாவது சிறந்த பொறியியல் கல்லூரி ஆகும். மேலும் அவர் ஒரு பொறியியலாளராக மட்டுமின்றி சிறந்த கல்வியாளராக திகழ்ந்தார்.

  ஆனால் அவரும் கடின உழைப்பாளிகளின் ஒருவர்தான். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் அவர் டாடா இரும்பு மற்றும் எஃகு நிர்வாகக் குழுவில் உறுப்பினரானார். பின்பு மைசூர் சோப்பு தொழிற்சாலையையும் நிறுவினார். 'இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் இந்தியா' (IEI) வின் படி சர் வி.எம் "இந்தியாவில் பொருளாதார திட்டமிடலின் முன்னோடி" என்று குறிப்பிடப்படுகிறார். மேலும் சர் வி.எம் இந்தியாவை மறுகட்டமைத்தல் மற்றும் இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.


  அவரது பிற்கால கட்டங்களில் மைசூர் திவானாக பணியாற்றினார். அங்கு அவர் 1915ல் நைட்டராக ஆனார். மேலும் 1955ல் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயாவிற்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1962ம் ஆண்டு உலகை விட்டு அவர் மறைந்தாலும் அவரது மரபு இன்னும் நாட்டின் இயந்திரங்களின் ஒரு பகுதியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Karthick S
  First published: