• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் - ப.சிதம்பரம்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

  • Share this:
    பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளையொட்டி சிறப்பு ஏற்பாடாக அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக மத்திய அரசு செய்து வந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரவு எட்டு மணிவரை நீடிக்கப்பட்ட தடுப்பூசி முகாம் நிறைவில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

    இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 2.50 கோடி என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியதில்லை. அதனால், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து கொரோனா தடுப்பூசி செலுத்தியது. இதனால், உலகிலேயே ஒரே நாளில் இரண்டரை கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தி சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியின் பிறந்தநாளான நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால், தடுப்பூசி போடுவதற்காக நாம் ஏன் பிரதமரின் பிறந்தநாள் வரை காத்திருக்க வேண்டும்?

    பிரதமரின் பிறந்த நாள் டிச.31ம் தேதி என்று வைத்துக்கொள்வோம். 2.5 கோடி தடுப்பூசிகள் ஆண்டின் கடைசி நாளில் மட்டும் போடப்பட்டிருக்குமா? தடுப்பூசி என்பது பிறந்தநாளில் கேக் வெட்டுவது போன்றதல்ல. தடுப்பூசி போடுதல் என்பது ஒரு திட்டம், அது ஒரு செயல்முறை, அது ஒவ்வொரு நாளும் துரிதப்படுத்தப்பட வேண்டும். பிறந்தநாளில் மட்டும் உச்சம் அடைய கூடாது.

    Also read: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சீனாவை முந்திய இந்தியா - மோடி பிறந்தநாளன்று சாதனை

    உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகத்தில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியை விட அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பிறந்தநாளை தவிர மற்ற நாட்களில் செயல்படாத மாநிலங்களாகவே இவை இருந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: