சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா!

ஏப்ரல் 3-ம் தேதி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்.பி.களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Web Desk | news18
Updated: April 1, 2019, 8:38 AM IST
சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா!
சுனில் அரோரா
Web Desk | news18
Updated: April 1, 2019, 8:38 AM IST
மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு சென்னை வரும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஏப்ரல் 2-ம் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரவுள்ளனர்.

அவர்கள் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அன்று அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்பட காலியாக இருக்கும் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த அரசியல் கட்சியினர் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 3-ம் தேதி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்.பி.களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அன்று மாலையே செய்தியாளர்களைச் சந்திக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகள் தொடர்பாக விவரிப்பார் என கூறப்படுகிறது.

Also see... 108 ஆம்புலன்ஸ்க்கு தந்தை யார் தெரியுமா? - திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...