ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடாதது ஏன்? தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் விளக்கம்

குஜராத் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடாதது ஏன்? தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் விளக்கம்

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்.

பனிப்பொழிவு நடைபெறுவதற்கு முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் தேர்தலை நடத்தி முடித்துவிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். – தேர்தல் ஆணையம்

  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடாதது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 8-ஆம் தேதியும், 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்த விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு… ஒரே கட்டமாக நடைபெறுகிறது வாக்குப்பதிவு…

இவ்விரு மாநிலங்களிலும், பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட மாட்டாது என தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு ராஜீவ் குமார் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்ட மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு இடையே 40 நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி 30 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் மட்டுமே அறிவிப்பை வெளியிட முடியும்.

இதனை தவிர்த்து பல காரணங்கள் இருக்கின்றன. வானிலை ஒரு மிக முக்கியமான காரணம். பனிப்பொழிவு நடைபெறுவதற்கு முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் தேர்தலை நடத்தி முடித்துவிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரை கலந்து ஆலோசித்த பின்னர்தான், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

மாணவி சத்யாவை கொலை செய்த சதிஷையும் ரயிலில் தள்ளி தண்டிக்க வேண்டும்: விஜய் ஆண்டனி கோரிக்கை

கடந்த 2017-இல் இரு மாநிலங்களிலும் நவம்பர் மாத தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது குஜராத்தில் மட்டும் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தற்போது, இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

First published:

Tags: Chief Election Commissioner, Gujarat