Home /News /national /

உதகையில் படித்தவர்.. ராணுவ குடும்பத்தை சேர்ந்த ஜெனரல் பிபின் ராவத்தின் பின்னணி

உதகையில் படித்தவர்.. ராணுவ குடும்பத்தை சேர்ந்த ஜெனரல் பிபின் ராவத்தின் பின்னணி

Bipin Rawat CDS

Bipin Rawat CDS

அமெரிக்காவில் ராணுவம் குறித்த பட்டப்படிப்பு முடித்துள்ளார்.. சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பிஃல் பட்டம் பெற்றுள்ளார்.

  • Last Updated :
    இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இன்று மதியம் தமிழகத்தின் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பிபின் ராவத்தின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.




     

    விபத்து நடந்த ஹெலிகாப்டரில் தீப்பற்றி எரிந்தது. விபத்து நடந்த பகுதியில் குவிந்த உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகள் மற்றும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையான சிரமத்துக்கு பின்னர் உடல்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் 13 பேர் பலியானார். விமானி வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


    மறைந்த பிபின் ராவத் இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர். இந்திய ராணுவ படைகளின் தலைமை தளபதியாக ஜனவரி 1, 2020 அவர் பொறுப்பேற்றார். உத்தரகாண்டை பூர்வீகமாக கொண்ட பிபின் ராவத் குடும்பமும் ராணுவ பின்னணி கொண்டது. பிபினின் தந்தை லெப்டினன்ட் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார்.


     

    இவர் சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். டெஹ்ராடூன், சிம்லா, வெலிங்டன் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்., அமெரிக்காவில் ராணுவம் குறித்த பட்டப்படிப்பு முடித்துள்ளார்.. சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பிஃல் பட்டம் பெற்றுள்ளார்.


    1978-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார்.
    டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் தலைமை அதிகாரி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி, இந்திய ராணுவத்தின் 27-வது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தலைமைத் தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணை தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வந்தார். .


    இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் திறப்பட பணியாற்றி பல்வேறு சிறப்புக்குரிய பெருமைகளை பெற்று விளங்கிய பிபின் ராவத் தனது பதவிக்காலம் நிறைவடைய ஓராண்டு காலம் இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


     

     
    Published by:Arun
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat, Helicopter Crash

    அடுத்த செய்தி