Home /News /national /

அதிவேகமாக வந்து பைக் மீது மோதிய கார்: தூக்கி வீசப்பட்ட பெண்.. பதற வைக்கும் வீடியோ

அதிவேகமாக வந்து பைக் மீது மோதிய கார்: தூக்கி வீசப்பட்ட பெண்.. பதற வைக்கும் வீடியோ

கேரளாவில் பைக் மீது கார் மோதி கோர விபத்து

கேரளாவில் பைக் மீது கார் மோதி கோர விபத்து

கேரளா மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக வந்த கார் எதிரில் வந்த ஸ்கூட்டரில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரளா மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக வந்த கார் எதிரில் வந்த ஸ்கூட்டரில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.  கேரளா மாநிலம் மலப்புரம், குற்றிப்புரம் பகுதியில்  நேற்று மாலை இன்னோவா கார் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. அப்போது,  கருக்குப்பாறை பகுதியை சார்ந்த அப்துல் காதர் என்பவர் எதிரில் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் வந்துள்ளார்.

இந்நிலையில்,  அதிவேகமாக வந்த கார் அப்துல் காதர் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஸ்கூட்டரின் பின்னால் இருந்த அவரது மனைவி, கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி கோட்டக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மஞ்சாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ஆன்லைன் லோன், ஆபாச படம் மூலம் மிரட்டி ரூ.500 கோடி மோசடி: பின்னணியில் சீன நபர்கள்

அதில், கார் ஸ்கூட்டர் மீது மோதுவதும், இருசக்கர வாகனத்தின் பின்னாள் உட்கார்ந்திருந்த பெண் சிசிடிவி கேமரா இருந்த திசையை நோக்கி அந்தரத்தில் பறந்துவந்து விழுவது பதிவாகியுள்ளது.
Published by:Kannan V
First published:

Tags: Accident, CCTV Footage, Kerala, Viral Video

அடுத்த செய்தி